பிரதமர் மோடியை விரைவில் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி..!
மோடியுடனான இந்த சந்திப்புக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புக்கொண்டுள்ளது.;
கொல்கத்தா,
மாநிலத்திற்கான நிதி நிலுவைத் தொகையை விடுவிப்பது தொடர்பாக டிசம்பர் 20-ல் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி.புது டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து மாநிலத்திற்கான நிதி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோடியுடனான இந்த சந்திப்புக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புக்கொண்டுள்ளது. டிசம்பர் 20-ம் தேதி காலை 11 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மேற்கு வங்காளத்திற்கு ரூ.1.15 லட்சம் கோடி மத்திய அரசு பாக்கி வைத்து உள்ளதாக மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.