சபரிமலையில் மகரவிளக்கு ஏற்பாடுகள் தீவிரம்; பாதுகாப்பு பணிக்கு 3 ஆயிரம் போலீசார் குவிப்பு
இடுக்கியில் மகரஜோதி தெரியும் இடங்களில் 1,400 போலீசார் குவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
திருவனந்தபுரம்,
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
சந்நிதானம், பம்பை, நிலக்கல் பகுதிகளில் 3 எஸ்.பி.க்கள் தலைமையில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மகரவிளக்கு தினத்தன்று போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடுக்கியில் மகரஜோதி தெரியும் இடங்களில் 1,400 போலீசார் குவிக்கப்பட உள்ளனர். வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.