கேரளாவில் 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார் கைது.!

கேரளாவில் 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியாரை போலீசார் கைதுசெய்தனர்.;

Update:2023-04-22 00:51 IST

கொச்சி,

கேரள மாநிலம் மூவாட்டுபுழாவில் 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் கொடுத்த பாதிரியார் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து எர்ணாகுளம் போலீசார் கூறுகையில், மூவாட்டுபுழாவில் 15 வயது சிறுமியை பாலியல் துண்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் 77 வயதுடைய பத்தனம்திட்டாவைச் சேர்ந்த பாதிரியார் ஷெமாவூன் ரம்பா கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் ஏப்ரல் 3 ஆம் தேதி நடந்தது. காவல்துறைக்கு கிடைத்த புகாரின்படி, பாதிரியார் தேவாலயத்தில் சிறுமியை பாலியல் துண்புறுத்தல் செய்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின் புகாரின் அடிப்படையில் பாதிரியார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்