கர்நாடகம் எப்போதும் பிரச்சினையை தீர்க்கும் மாநிலமாகவே உள்ளது - யோகி ஆதித்யநாத் பேச்சு

கர்நாடகம் எப்போதும் பிரச்சினையை தீர்க்கும் மாநிலமாகவே உள்ளது என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார்.;

Update:2022-09-02 06:57 IST

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்று பேசியதாவது:-

கொரோனா தொற்று மனித இனத்திற்கே பெரும் சவாலாக விளங்கியது. இந்த கொரோனா தொற்றில் இருந்து இந்தியா மீண்டு வந்ததை, இந்த உலகமே பார்த்து வியந்தது. அதற்கு முக்கிய காரணம் யோகா மற்றும் நமது நாட்டின் பாரம்பரியமிக்க மருத்துவம் தான்.

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றால், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, ஆயுர்வேதம், சித்த மருத்துவ முறையை நோக்கி மக்கள் செல்ல வேண்டும்.

கர்நாடகம் எப்போதும் பிரச்சினையை தீர்க்கும் மாநிலமாகவே இருந்துள்ளது. வனவாசத்தின் போது ராமருக்கு அனுமன் உதவினார். இது ராமராஜ்ஜியம் உருவாக அடித்தளமாக இருந்தது. பெங்களூரு தகவல் தொழில் நுட்பத்தின் தலைநகராக இருந்து வருகிறது. தற்போது உலகின் பாரம்பரிய மருத்துவத்தின் மையமாகவும் வளர்ந்து வருகிறது.

இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற, பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கை அடைய மக்கள் தங்கள் பணியில் அதிக நிபுணத்துவத்தை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்