பெண்களின் பைகளில் இருந்த அழகு சாதன பொருட்கள் பறிமுதல்

பிரதமர் மோடியின் பொதுக்கூட்டங்களில் தொடரும் கெடுபிடியாக பெண்களின் பைகளில் இருந்த அழகு சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-04-30 18:45 GMT

கோலார்:

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரசாரத்திற்காக வந்துள்ள பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், பிரதமரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போலீசார் கடும் கெடுபிடிகளை கடைப்பிடித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் பெங்களூருவில் பிரதமர் மோடி திறந்த வாகன ஊர்வலத்தின் போது போலீசாரின் கெடுபிடியால் திருமண நிச்சயத்தார்த்திற்கு சென்ற மணமகன் ஒருவரும், திருமணத்திற்காக சென்ற மணமகளும் பரிதவித்தனர். பின்னர் அவர்களை போலீசார் தீவிர சோதனைக்கு உட்படுத்திய பிறகு திருமண மண்டபங்களுக்கு செல்ல அனுமதித்தனர்.

இந்த நிலையில் நேற்று கோலாரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதிலும் போலீசாரின் கெடுபிடிகள் தொடர்ந்து. அதாவது, இதில் பங்கேற்க ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் கொண்டு வந்த கைபைகளை சோதனையிட்டு, அதில் இருந்த அழகு சாதன பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனால் பெண்கள் பலரும் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். அத்துடன் கருப்பு நிற உடையணிந்து வந்த ஆண், பெண் தொண்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதுபோல் தண்ணீர் பாட்டீல், சிகரெட் லைட்டர்கள் எடுத்துவரவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்