நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி வழங்க இந்தியா கூட்டணி முன்வந்தது: ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிர்வாகி

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கு பிரதமர் பதவியை வழங்க இந்தியா கூட்டணி முன்வந்ததாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் கே.சி.தியாகி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2024-06-08 21:09 IST

பாட்னா,

பீகார் முதல் மந்திரியும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமாரை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அவருக்கு பிரதமர் வழங்க முன் வந்ததாக கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: -நிதிஷ் குமாருக்கு இந்தியா கூட்டணியில் இருந்து பிரதமராக வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார், நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

அதேவேளையில், நிதிஷ் குமாருக்கு எந்த தலைவர் அல்லது தலைவர்கள் பிரதமர் பதவியை வழங்க முன்வந்தார்கள் என்று கேட்டபோது, யாருடைய பெயரையும் கூற அவர் மறுத்துவிட்டார். எனினும், காங்கிரஸ் கட்சி இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "நிதிஷ் குமாரை பிரதமர் ஆக்குவதற்காக இந்தியா கூட்டணி அணுகியது போன்ற தகவல்கள் எங்களிடம் இல்லை. அவருக்கு மட்டுமே இது பற்றி தெரியும் என நினைக்கிறேன்" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்