ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக்காவல் ஜூலை 26-ந்தேதி வரை நீட்டிப்பு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக்காவல் ஜூலை 26-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்தியதாக சென்னையை சேர்ந்த முன்னாள் தி.மு.க. பிரமுகர் ஜாபர்சாதிக் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களின் நீதிமன்றக்காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து ஜாபர்சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவலை ஜூலை 26-ந்தேதி வரை நீட்டித்து டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தாக்கல் செய்துள்ள 5 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக ஜூலை 26-ந்தேதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.