கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் - மம்தா பானர்ஜி மகிழ்ச்சி
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.
கொல்கத்தா,
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. தேர்தல் பிரசார பணிகளுக்காக கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, ஜூன் 2ம் தேதி சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், ஜாமீன் வழங்கப்பட்டதற்கு மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தேர்தல் நேரத்தில் அவருக்கு ஜாமீன் கிடைத்திருப்பது உதவிகரமாக இருக்கும் என்றும் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.