இந்திய ஹாக்கி அணி அற்புதமாக விளையாடியது - ராகுல் காந்தி
ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.;
சென்னை,
பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது. பதக்கம் வென்ற இந்திய அணிக்கு மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
"ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அற்புதமான விளையாட்டை வெளிப்படுத்தியது. ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். ஸ்ரீஜேஷின் இடைவிடாத அர்ப்பணிப்பு எங்களை ஊக்கப்படுத்தியுள்ளது."
என தெரிவித்துள்ளார்.