சுள்ளியா தாலுகாவில் மழை பாதித்த பகுதிகளில் மந்திரி அங்கார் ஆய்வு
சுள்ளியா தாலுகாவில் மழை பாதித்த பகுதிகளில் மந்திரி அங்கார் ஆய்வு செய்தார்.
மங்களூரு;
கர்நாடகத்தின் கடலோர மற்றும் மலைநாடு மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா ஹரிஹரா பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் குறித்து துறைமுகம் மற்றும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து மந்திரி அங்கார் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர் மேனாலு கிராமத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடமும், கிராம மக்களிடமும் கேட்டு அறிந்தார்.
அப்குகாலா பகுதியில் ஆற்றை கடக்க வசதியாக விரைவில் பாலம் அமைத்து கொடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார்.