மைசூருவில், விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சரிவர உரம் வழங்காததை கண்டித்து மைசூருவில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-10-21 00:15 IST

மைசூரு:

மைசூரு மாவட்ட விவசாய சங்கத்தினர் நேற்று அரண்மனை பின்புறத்தில் உள்ள கன்ஹவுஸ் சர்க்கில் பகுதியில் இருந்து விவசாய சங்க அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கு சரிவர உரம் வழங்காததை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது;-

\உன்சூர் தாலுகாவில் உள்ள விவசாயிகளுக்கு தர வேண்டிய உரத்தை பதுக்கி வைத்து கொண்டு அதனை அதிக விலைக்கு திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருகின்றனர். மேலும் அதனை தனியார் நிறுவனங்களுக்கு கடத்துகின்றனர். விவசாயிகள் விவசாயத்திற்கு உரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் திருட்டு தனமான உரம் விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அவர்களிடம் கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான அத்தியாவசியமான விவசாய பொருட்களை தக்க சமயத்தில் வழங்க வேண்டும். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் விளைநிலத்தில் இருந்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளது. அதற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்