நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - டெல்லியில் 4 பேர் கொண்ட கும்பல் கைது
சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பதிலாக முதலாம் ஆண்டு மாணவர்களை தேர்வு எழுத வைத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.;
புதுடெல்லி,
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 4 பேர் கொண்ட கும்பலை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும், நரேஷ் பிஷ்ரோய் என்பவர் இந்த கும்பலுக்கு தலைமை தாங்கியதாகவும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பதிலாக முதலாம் ஆண்டு மாணவர்களை தேர்வு எழுத வைத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களை அணுகும் மாணவர்களிடம் தலா ரூ.7 லட்சம் வசூல் செய்து ஆள்மாறாட்டம் செய்துள்ளனர். குற்றவாளிகளிடம் இருந்து லேப்டாப் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.