மன்னர் சார்லஸ் விரைவில் குணமடைய வேண்டும் - பிரதமர் மோடி
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசிற்கு முழு உடற் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.;
புதுடெல்லி,
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு அந்நாட்டின் மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டார். 75 வயதாகும் சார்லஸ், கடந்த மாதம் ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு பரிசோதனை செய்ததில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அதிகாரபூர்வமாக தகவல் தெரிவித்தது. மன்னருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் குணமடைந்து மக்கள் சார்ந்த பணிகளை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மன்னர் சார்லஸ் விரைவில் குணமடைந்து ஆரோக்கியம் பெற இந்திய மக்களுடன் இணைந்து தாமும் பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.