சி.ஏ.ஏ. சட்டப்படி செல்லுபடியாகுமா என்ற சந்தேகம் உள்ளது: மம்தா பானர்ஜி

மத்திய அரசு அறிவித்த சி.ஏ.ஏ.,வின் விதிகளில் தெளிவு இல்லை என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Update: 2024-03-12 09:34 GMT

கொல்கத்தா,

மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் நிறைவேறிய நிலையில், இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இருப்பினும், கடந்த 4 ஆண்டுகளாக இது குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் இருந்தது.

இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் மத்திய அரசு இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக அறிவித்தது. இந்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்தநிலையில், மத்திய அரசு அறிவித்த சி.ஏ.ஏ.,வின் விதிகளில் தெளிவு இல்லை என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹப்ராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி கூறுகையில்,

சிஏஏ-வை விண்ணப்பிக்கும் முன் பலமுறை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார். இது குடிமக்களுக்கு இருக்கும் உரிமைகளைப் பறிக்கும் விளையாட்டாகும் என்று தெரிவித்த அவர் இது நாட்டில் என்.ஆர்.சி. செயல்படுத்துவதோடு நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். சிஏஏ அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது மற்றும் பாரபட்சமானது என்றும் குற்றம்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்