மத்திய மந்திரி அனுராக் தாக்கூரிடம் வாழ்த்து பெற்ற குகேஷ்

கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேஷ் மத்திய மந்திரி அனுராக் தாக்கூரிடம் வாழ்த்து பெற்றார்;

Update:2024-05-03 17:44 IST

புதுடெல்லி, 

'பிடே' கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் 8 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் (17 வயது) வென்ற வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு குகேஷ் தகுதி பெற்றுள்ளார்.

இந்நிலையில், கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேஸ் மத்திய மந்திரி அனுராக் தாக்கூரிடம் வாழ்த்து பெற்றார்- மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர்-ஐ இன்று சந்தித்தார். அப்போது, குகேசுக்கு அனுராக் தாக்கூர்வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக அனுராக் தாக்கூர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இது ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு வாழ்த்துக்கள். குகேஷின் அர்ப்பணிப்பு மற்றும் திறமை உண்மையிலேயே பிரகாசித்தது, நாடு முழுவதும் உள்ள பல ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கிறது. அவரது சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் அவரது எதிர்கால முயற்சிகளில் அவர் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்