ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு கவர்னர் அழைப்பு

ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க சம்பாய் சோரன் உரிமை கோரினார்.

Update: 2024-02-01 23:59 GMT

ராஞ்சி,

நிலம் தொடர்பான முறைகேடான பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரியும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினமா செய்தார். இரவில் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே நேற்று ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க சம்பாய் சோரன் உரிமை கோரினார். கவர்னரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சம்பாய் சோரன், "ஆட்சி அமைப்பதற்கான பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், ஜார்கண்டில் ஆட்சி அமைக்க சம்பாய் சோரனுக்கு அம்மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். நள்ளிரவில் கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பாய் சோரன் இன்று ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்