தெலுங்கானாவில் பா.ஜனதாவில் இணைந்த ஆளுங்கட்சி முன்னாள் எம்.பி.

தெலுங்கானாவில் ஆளுங்கட்சி முன்னாள் எம்.பி. பா.ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.;

Update:2022-10-20 00:16 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியை (டி.ஆர்.எஸ்.) சேர்ந்த முன்னாள் எம்.பி., பூராஸ் நர்சையா. தெலுங்கானா பிரிவினைக்காக டி.ஆர்.எஸ். மேற்கொண்ட தொடக்க கால போராட்டங்களின்போதே கட்சியுடன் அவர் இணைந்து பணியாற்றி வந்தார்.

அவர் நேற்று தெலுங்கானா ராஷ்டிர சமிதியில் இருந்து விலகி, பா.ஜனதாவில் இணைந்தார். மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ், பொதுச்செயலாளர் தருண் சுக் மற்றும் மூத்த தலைவர்களின் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. அவரை பா.ஜனதாவுக்கு வரவேற்ற பூபேந்தர் யாதவ், தெலுங்கானாவில் விரைவில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்