சயனைடு மலையில் சினிமா படப்பிடிப்பு

கோலார் தங்கவயலில் உள்ள சயனைடு மலையில் சினிமா படப்பிடிப்புகளை காண வந்த பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-11 18:45 GMT

கோலார் தங்கவயல்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் ஆங்கிலேயர் காலத்தில் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டது. தற்போது தங்கச்சுரங்கம் மூடப்பட்டு விட்டது.

இந்த நிலையில் பூமிக்கு அடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு, பின்னர் தங்கம் பிரித்தெடுக்கப்பட்ட சயனைடு மண் கோலார் தங்கவயலில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த பகுதி சுற்றுலா தலமாக மாறி வருகிறது. மேலும் அங்கு சினிமா படப்பிடிப்புகளும் அடிக்கடி நடந்து வருகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருடா, திருடி படத்தில் இடம்பெற்று இருக்கும் மன்மத ராசா பாடல் இங்கு தான் படமாக்கப்பட்டது.

மேலும் கன்னடம் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற கே.ஜி.எப். திரைப்படமும் இங்கு தான் படமாக்கப்பட்டது.

இதன் காரணமாக இந்த சயனைடு மலை பிரபலம் அடைந்தது. அதுபோல் நேற்று ஒரு கன்னட திரைப்படக்குழுவினர் படப்படிப்புக்காக சயனைடு மலைக்கு வந்தனர். அவர்கள் உரிய அனுமதி பெற்று அங்கு படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தனர்.

இதுபற்றி அறிந்த பொதுமக்கள் படப்பிடிப்பை காண வந்தனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது. இதுபற்றி அறிந்த தங்கச்சுரங்க பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அங்கு வந்து படப்பிடிப்பை காண பொதுமக்களை அனுதிமக்கவில்லை.

இதன்காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் மிகவும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்