ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்த ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்

ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இணைந்தார்.

Update: 2022-12-14 06:49 GMT

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை அடைந்துள்ளது.

இந்த யாத்திரையின்போது ராகுல்காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். ராகுல்காந்தியின் இந்த யாத்திரை பயணத்திற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனிடையே, பாரத் ஜோடோ யாத்திரையின் 98-வது நாளான இன்று ராகுல்காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவருடன் இணைந்து ஆயிரக்கணக்கானோர் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ யாத்திரையில் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இணைந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் சுவாமி மதொபூர் பகுதியில் ராகுல்காந்தியுடன் பாதயாத்திரையில் ரகுராம் ராஜன் இணைந்து நடைபயணம் மேற்கொண்டார்.

ரகுராம் ராஜன் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரிசர்வ் வங்கி கவர்னராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்