கோவா ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள் குதூகலமாக நடனமாடும் வீடியோ வைரல் - கடுமையாக எச்சரித்த ஏக்நாத் ஷிண்டே

கோவா ஓட்டலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நடனமாடி கொண்டாடியதை ஏக்நாத் ஷிண்டே கண்டித்தார்.

Update: 2022-07-01 11:45 GMT

பனாஜி(கோவா),

கோவா ஓட்டலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நடனமாடி கொண்டாடியதை ஏக்நாத் ஷிண்டே கண்டித்தார்.

ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல் மந்திரி பதவி வழங்கப்பட்ட முடிவை சற்றும் எதிர்பார்க்காத அவரது ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிலர், நேற்று நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மராத்தி பாடல்களுக்கு நடனமாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும் அவர்கள் நடனமாடிய விதத்திற்காக அவர்களை கண்டித்துள்ளனர். இந்த செயல் அநாகரீகமானதாக இருப்பதாக கூறினர்.

இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்களின் இந்த செயலை ஏக்நாத் ஷிண்டே கண்டித்துள்ளார். மேலும் நடனம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ஷிண்டே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு ஷிண்டே கேட்டுக் கொண்டார்

ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏக்கள் முகாமின் செய்தித் தொடர்பாளரும், சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.வுமான தீபக் கேசர்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அப்படி நடனமாடியது தவறு என்பதை நாங்கள் பெரிய மனதுடன் ஒப்புக்கொள்கிறோம்.இத்தகைய தவறுகள் மகிழ்ச்சியான தருணங்களில் நடப்பது சகஜம், ஆனால் அவை நடந்திருக்கக் கூடாது.மராட்டியத்தின் முன்னேற்றத்திற்காகவே நாங்கள் பாஜகவுடன் கைகோர்த்துள்ளோம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்