டெல்லியில் லேசான நிலநடுக்கம்
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது.
புதுடெல்லி,
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ரிக்டர் அளவில் 3.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மாலை 4.08 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் இருந்து கிழக்கில் 9 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.