மிசோரத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
மிசோரத்தில் நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஐஸ்வால்,
வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் இன்று நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஷம்ப்ஹை நகரில் இருந்து 50 கிழக்கு பகுதியில் 13 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
நள்ளிரவு 12.50 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின.
ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.