தெலுங்கானாவில் கனமழையால் மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
மாநிலத்தின் 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
ஹைதராபாத்,
தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளையும் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். ஏற்கனவே, கடந்த 26,27 ஆகிய தேதிகளில் கனமழை காரணமாக விமுறையில் இருக்கும் தெலுங்கானா மாநிலத்திற்கு மீண்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் முழுவதும் இடைவிடாமல் மழை பெய்துவருவதால் மாநிலத்தின் 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.