இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவராக ராஜீவ் பாஹல் நியமனம்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் புதிய தலைவராக டாக்டர் ராஜீவ் பாஹல் நியமிக்கப்பட்டுள்ளார்.;
புதுடெல்லி,
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தலைவராக டாக்டர் பலராம் பார்கவா பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்று விட்டார்.
இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் புதிய தலைவராக டாக்டர் ராஜீவ் பாஹல் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது உலக சுகாதார அமைப்பில் பச்சிளம் சிசு மற்றும் இளம்பருவ ஆரோக்கியம் மற்றும் முதுமைத் துறையில் பச்சிளம் சிசு, இளம்பருவ ஆரோக்கியம் மற்றும் முதுமை பிரிவு தலைவராக பணியாற்றி வருகிறார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவராக இவரை நியமிப்பதற்கு நியமனங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்துள்ளது.இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.