இளம்பெண்ணுக்கு திருமண ஆசைகாட்டி பலமுறை உல்லாசமாக இருந்த திருமணமான நபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு!

பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஒரு திருமணமான நபருக்கு, டெல்லி ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது.

Update: 2022-08-09 16:49 GMT

புதுடெல்லி,

பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஒரு திருமணமான நபருக்கு, டெல்லி ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தன்னுடன் பணிபுரிந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, அவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 35 வயது நபர் மீது பாதிக்கப்பட்ட பெண் அளித்த குற்றச்சாட்டின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அந்த நபர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இது குறித்து மனுதாரர் தரப்பில் கூறுகையில், என் மீது வேண்டுமென்றே, என்னிடமிருந்து பல தேவைகளை பூர்த்தி செய்ய, பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் ஏற்கெனவே திருமணமானவர்கள். அதனால் அவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்ற வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறுகையில், மனுதாரர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அதேபோல பாதிக்கப்பட்ட பெண்ணும் திருமணம் ஆனவர். அப்படி இருக்கும்போது அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி பலவந்தமாக அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்க வாய்ப்பில்லை.

இருவருக்குமே தாங்கள் திருமணம் ஆனவர்கள் என்பது அறிந்திருப்பதால் அந்த பெண்ணை ஏமாற்றி தான், அவர் பாலியல் உறவு கொண்டார் என்பது நம்பும்படியாக இல்லை. ஆகவே அவருக்கு ரூ.25 ஆயிரம் தொகை செலுத்தி ஜாமினில் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

அதே வேலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளில் அவர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்