பாஜக.வினால் டெல்லி மாநகராட்சி ஊழலில் சிக்கித் தவிக்கிறது: அரவிந்த் கெஜ்ரிவால்

தலைநகர் டெல்லியில் வரும் 4ந் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது.

Update: 2022-12-02 14:28 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் வரும் 4ந் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன. வரும் 7ம் தேதி வாக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

கடந்த தேர்தலில் பாஜக மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது. தற்போது நடைபெறும் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தையொட்டி டவுன் ஹால் பகுதியில் நடைபெற்ற வர்த்தகர்கள் கூட்டத்தில் பேசிய டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளதாவது:

டெல்லி அரசாங்கமும் மாநகராட்சி நிர்வாகமும் ஒரே கட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பது ஒருபோதும் நடக்கவில்லை. தற்போது ஒரு மாற்றம், தேவை மட்டுமல்ல அவசியமும் கூட. மாற்றத்திற்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று (பாஜகவின்) தற்பெருமை. குஜராத்தில்(பா.ஜ.க.)நடந்து கொள்வதை போன்ற இங்கு அவர்கள் ஆட்சி செய்கிறார்கள்.

இந்த முறை ஆட்சி அமைக்க முயற்சிப்போம். அப்படி அமைந்தால் நானும் ஆறுதல் அடைவேன். வேலை எதுவும் நடக்கவில்லை என்றால், எம்.எல்.ஏ., கவுன்சிலர் இருவரையும் அழைத்து ஏன் நடக்கவில்லை என்று நான் கேட்பேன். மாநகராட்சி ஊழலில் சிக்கித் தவிக்கிறது. அதைச் சுத்தப்படுத்தும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை. ஊழல் நிறைந்த டெல்லி மாநகராட்சியை சுத்தம் செய்ய வாக்காளர்கள் ஒருமுறை (ஆம் ஆத்மிக்கு) வாய்ப்பு தாருங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்