டெல்லி மாநகராட்சி தேர்தல்: இன்று வாக்குப்பதிவு

தேர்தலை முன்னிட்டு அனைத்து கடைகளும் நாளை மூடப்படும் என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.;

Update:2022-12-04 06:20 IST

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன.

மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. கடந்த தேர்தலில் பா.ஜ.க. மாநகராட்சியைக் கைப்பற்றியிருந்தது. வரும் 7ம் தேதி வாக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

டெல்லி மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து கடைகளும் நாளை மூடப்படும் என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்