சக நண்பர்களால் இயற்கைக்கு மாறான முறையில் பலாத்காரம் செய்யப்பட்ட 5ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

டெல்லியில் 10 வயது சிறுவனை 3 சிறுவர்கள் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

Update: 2022-10-01 07:18 GMT

புதுடெல்லி,

டெல்லியின் சீலம்பூர் குடிசைப் பகுதியில் 10 வயது அப்பாவி சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொடுஞ்சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் செப்டம்பர் 18 அன்று வெளிச்சத்துக்கு வந்தது.

5ஆம் வகுப்பு பயிலும் அந்த மாணவனை, மூன்று சிறுவர்கள் கொடூரமாக இயற்கைக்கு மாறான முறையில் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், அவனது அந்தரங்க உறுப்புகளில் இரும்பு கம்பியை வைத்தும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுவன் சீலம்பூர் பகுதியில் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். செப்டம்பர் 18 ஆம் தேதி, சிறுவனின் பக்கத்து வீடுகளில் வசிக்கும் மூன்று சிறுவர்கள் அவனை வெறிச்சோடிய ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அவர்கள் மூவரும் பாதிக்கப்பட்ட சிறுவனின் நண்பர்கள் ஆவர். அந்த சிறுவர்களின் வயது 10-12க்குள் மட்டுமே இருக்கும்.அன்று மாலை கிரிக்கெட் விளையாடுவதாக கூறி அக்கம்பக்கத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் சிறுவனை அழைத்து சென்றனர்.அவனை வெறிச்சோடிய ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்ற பின்னர், சிறுவனை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு சிறுவன் மறுத்ததால், அந்த 3 மர்மநபர்களும் சிறுவனை கல் மற்றும் கம்பியால் தாக்கினர். அதற்குப் பிறகு சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் ஒரு தடியை வைத்துள்ளனர். இறுதியில் சிறுவன் எப்படியோ வீட்டை அடைந்தான். ஆனால் பயத்தில் அந்த சிறுவன் யாரிடமும் எதுவும் கூறவில்லை. குடும்பத்தினர் கேட்டபோது, ​​தகராறு நடந்ததாக மட்டும் தெரிவித்தான்.

அடுத்த நாள் திடீரென சிறுவனின் உடல்நிலை மோசமடைந்தது. உடனே குடும்பத்தினர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதுதான் அந்த அதிச்சி சம்பவம் பற்றிய விவரம் வெளிவந்தது. இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு மைனர் சிறுவர்களை கைது செய்த போலீசார், தவறான நடத்தை, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அந்த இரண்டு சிறுவர்களும் சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர், அங்கிருந்து அவர்கள் சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர்.

இந்த வழக்கில், டெல்லி மகளிர் ஆணையம் போலீசாருக்கு நோட்டீஸ் கொடுத்து, செப்டம்பர் 28-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கக் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிறுவனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தான்.

Tags:    

மேலும் செய்திகள்