மராட்டிய மழை வெள்ள பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக உயர்வு!

மராட்டிய மாநிலத்தில் மழை வெள்ள பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2022-07-15 22:24 GMT

மும்பை,

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. கடந்த 24 மணி நேரத்தில் கட்சிரோலி மற்றும் சந்திராப்பூர் மாவட்டங்களில் 20.5 மி.மீட்டர் மழை பதிவானது.

வெள்ளப்பெருக்கால் அந்த மாநிலத்தின் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. 20 கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், 3,873 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்பாக விபத்துக்களில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநில பேரீடர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 14ந் தேதி வரை மழை வெள்ளம், மின்னல், நிலச்சரிவு மரம் மற்றும் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்