கேரளாவில் படையெடுக்கும் கொடிய வைரஸ்.. அசுத்தமான நீர் மற்றும் உணவால் பரவும் அபாயம்

கேரள மாநிலம் கோழிகோட்டில் மேலும் இருவருக்கு ஷிகெல்லா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.;

Update:2022-10-27 10:10 IST

கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோழிகோட்டில் மேலும் இருவருக்கு ஷிகெல்லா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அசுத்தமான நீர் மற்றும் உணவால் பரவும் ஷிகெல்லா வைரஸ் தொடர்ந்து கேரளாவை அச்சுறுத்தி வருகிறது.

காரச்சேரி பகுதியை சேர்ந்த ஒன்பது வயது சிறுவனுக்கு அண்மையில் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து சிறுவனுடன் தொடர்பில் இருந்த பலருக்கும் சோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் இரண்டு பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

தொற்று பரவி வருவதால், அங்கு நோய்த்தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்