3 மாதங்களுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் 100-ஐ தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு..!

மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 107 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2022-06-10 18:19 GMT

கோப்புப்படம் PTI

கொல்கத்தா,

கடந்த சில வாரங்களாக மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் கொரோனா பாதிப்பு 100-ஐத் தாண்டியுள்ளது. கடைசியாக மார்ச் 11 அன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 100-ஐத் தாண்டி 106 ஆக இருந்தது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 7,689 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 107 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரானாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,20,034 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 49 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,98,254 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்