18 வயது வரையிலானவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது - பரிசோதனை முடிவு

18 வயது வரையிலானவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.;

Update:2022-06-18 06:20 IST

கோப்புப்படம்

ஐதராபாத்,

ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தார், கொரோனாவுக்கு எதிராக தயாரித்து வழங்கும் கோவேக்சின் தடுப்பூசி 2 முதல் 18 வயது வரையிலான பிரிவினருக்கு செலுத்தி இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் முடிவில், கோவேக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது, நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் அதிக நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பாரத் பயோடெக் நிறுவனத்தார் அறிவித்துள்ளனர்.

இந்த பரிசோதனை அறிக்கையை 'லேன்செட் தொற்று நோய்கள்' பத்திரிகை ஏற்று வெளியிட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தார் கோவேக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வரையிலானவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் தொடங்கி செப்டம்பர் வரையில் செலுத்தி பரிசோதித்துள்ளனர். இதன் தரவுகள் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன்பேரில் 6 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த அவசர கால பயன்பாட்டு அனுமதி தரப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்