திடீர் அதிர்ச்சி கொடுத்த கொரோனா - மாநிலங்களுக்கு பறந்த உத்தரவு

பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளதால், மாநிலங்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என பிரதமரின் முதன்மை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2023-08-22 08:56 GMT

புதுடெல்லி,

புதிய வகை கொரோனா மற்றும் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து பிரதமரின் முதன்மை செயலாளர் பி கே மிஸ்ரா உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். நிதி ஆயோக், சுகாதாரத்துறை உட்பட பல்துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது, உலக அளவில் நிலவும் புதிய வகை கொரோனா திரிபு குறித்து விவாதிக்கப்பட்டது. 50 நாடுகளில் இஜி.5 வகை கொரோனா திரிபும், 4 நாடுகளில் பிஏ.2.86 வகை கொரோனா திரிபும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கொரோனா தொற்றை எதிர்கொள்ள சுகாதார செயல்பாடுகள் ஆயத்தமாக இருப்பதாக தெரிவித்த பி.கே.மிஸ்ரா, புதிய வகை கொரோனாவை மாநிலங்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். போதிய அளவு மாத்திரைகள் அனுப்ப வேண்டும் என்றும், மரபணு பகுப்பாய்வுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்