டெல்லியில் நிறுத்தப்பட்ட கட்டுமான பணிகள்; கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்க கெஜ்ரிவால் உத்தரவு

கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்க தொழிலாளர் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-02 14:47 GMT

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசு மோசமான அளவில் நிலவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக டெல்லி அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு கட்டுப்பாடு, பட்டாசு வெடிக்க தடை, விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கட்டுமான பணிகள் காரணமாக ஏற்படும் காற்று மாசு அளவை குறைப்பதற்காக டெல்லியில், கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அவர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்க தொழிலாளர் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்