'அதானி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் ஒரு கமிட்டி அமைத்து விசாரணை நடத்த வேண்டும்' - மல்லிகார்ஜூன கார்கே
அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.;
புதுடெல்லி,
அதானி குழும நிறுவனங்கள் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியைத் தொடர்ந்ததால் சபைகள் முடங்கின. எந்த அலுவலும் நடைபெறவில்லை.
இதனைத் தொடர்ந்து சபைக்கு வெளியே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
" மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம்.
இல்லாதபட்சத்தில் சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் ஒரு கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி, அதன் விசாரணை விவரத்தை ஒவ்வொருநாளும் தெரிவிக்க வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.