காஷ்மீரில் ரூ.300 கோடி போதைப்பொருள் சிக்கியது: பஞ்சாப்பை சேர்ந்த 2 பேர் கைது
காஷ்மீரில் ரூ.300 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பஞ்சாப்பை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டது.
ஜம்மு,
காஷ்மீரின் ஜம்மு நகரில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள பனிஹால் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வாகனத்தில் வந்த 2 பேரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அதனை தொடர்ந்து வாகனத்தில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 30 கிலோ கொஹைன் போதைப்பொருளை போலீசார் கைபற்றினர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.300 கோடி என போலீசார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போதைப்பொருளை கடத்தி வந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.