சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்டு
கடந்த 50 நாட்களுக்கு மேல் ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டிருந்தார்.;
அமராவதி,
ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கடந்தமாதம் 9-ந்தேதி கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 50 நாட்களுக்கு மேல் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்திரபாபு நாயுடு, தனக்கு பார்வை கோளாறு மற்றும் உடல்நிலை சரியில்லாததால், மருத்துவ சிகிச்சை பெற ஜாமீன் வழங்கக் கோரி ஆந்திரா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, சந்திரபாபு நாயுடுவிற்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.