சர்வாதிகாரி போல் செயல்படும் சந்திரபாபு நாயுடு - ஜெகன் மோகன் ரெட்டி விமர்சனம்

புதியதாக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற சிறிது நாட்களிலேயே சந்திரபாபு நாயுடு சர்வாதிகாரி போல் செயல்படுவதாக ஜெகன் மோகன் ரெட்டி விமர்சித்துள்ளார்.;

Update:2024-06-23 12:43 IST

அமராவதி,

ஆந்திராவில் அனுமதியின்றி கட்டப்பட்டு வருவதாக கூறி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை நேற்று அதிகாலை அதிகாரிகள் இடித்து தரை மட்டமாக்கினர். இது குறித்து முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

`புதியதாக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற சிறிது நாட்களிலேயே சந்திரபாபு நாயுடு சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். மாநிலத்தில் சட்டமும் நீதியும் மறைந்து விட்டது. இதற்காக ஒய்.எஸ்.ஆர் சார் காங்கிரஸ் கட்சி தலை வணங்காது. எதிர்த்து போராடும் இந்த மிரட்டல் வன்முறைக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். இந்த தவறான செயல்களை கண்டிக்க வேண்டும் என்று நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்