தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பஸ், ரெயில் நிலையங்களில் பிரசாரம் - மத்திய ஜவுளித்துறை தகவல்
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பஸ், ரெயில் நிலையங்களில் பிரசாரம் செய்யப்படுவதாக மத்திய ஜவுளித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் உதவி இயக்குனர் பூர்ணிமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி தூய்மை இந்தியா திட்டத்தை கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி தொடங்கி வைத்தார். இதனை முன்னிட்டு நாடு முழுவதும் லட்சக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்பட்டன. கடந்த 2019-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி கிராம பஞ்சாயத்து, மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றம் யூனியன் பிரதேசங்களில் திறந்தவெளி கழிப்பிட பழக்கம் இல்லாதவைகளாக அறிவித்தன. தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த மாதம் 15-ந்தேதியில் இருந்து நாளை (திங்கட்கிழமை) வரை 'குப்பையில்லா இந்தியா' என்ற பிரசாரம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பஸ், ரெயில் நிலையங்கள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள் போன்ற இடங்களில் பிரசாரம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.