அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது தளத்தில் குடையுடன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு
அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது தளத்தில் குடையுடன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தான்.;
மும்பை,
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது தளத்தில் குடையுடன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு மும்பையின் பைகுல்லா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உயிரிழந்த சிறுவனின் குடும்பம் பைகுல்லா பகுதியில் உள்ள ஹவுசிங் சொசைட்டியின் 11-வது தளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர். நேற்று காலையில் சிறுவன் ஜன்னலுக்கு அருகே உள்ள பெட்டில் இருந்து குடையுடன் விளையாடிக்கொண்டு இருந்துள்ளான். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சிறுவன் ஜன்னல் வழியாக 11-வது தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளான்.
சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் மீது விழுந்த சிறுவனை, மும்பை சென்ட்ரல் அருகே உள்ள சிவில் நாயர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது சிறுவனுடன் அவனது தாயும் மற்ற உறவினர்களும் அதே அறையில் இருந்துள்ளனர். சிறுவன் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.