பா.ஜ.க. உயர்மட்ட குழு நாளை கூடுகிறது: 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு?
நாளைய கூட்டத்தின் முடிவில் தென் மாநிலங்களுக்கான வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ஜனதாவின் உயர்மட்டக்குழு நாளை டெல்லியில் கூடி ஆலோசனை நடத்துகிறது. மக்களவைத்தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர்களை இறுதி செய்ய பா.ஜ.க. உயர்மட்ட குழு கூட்டம் நடைபெறுகிறது. நாளைய கூட்டத்தின் இறுதியில் தமிழகம் உள்பட தென் மாநிலங்களுக்கான வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மக்களவைத்தேர்தலுக்கான 195 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் பா.ஜ.க.வெளியிட்டது.
மத்தியில் ஆளும் பா.ஜனதா முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் 2-ம் கட்ட பட்டியலும் தயாராகி வருகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியாகாத நிலையில், பா.ஜ.க வேட்பாளர் பட்டியலை வெளியிட ஆரம்பித்துள்ளது.