மேற்குவங்காளம்: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க சென்ற பாஜக எம்.எல்.ஏ. மரணம்

மேற்குவங்காளத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க சென்ற பாஜக எம்.எல்.ஏ. மரணமடைந்தார்.

Update: 2023-07-25 10:31 GMT

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் துஹப்குரி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. பிஷ்னு படா ராய் (வயது 61). மேற்குவங்காள சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்க பிஷ்னு கொல்கத்தா வந்துள்ளார்.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிஷ்னுவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், பிஷ்னுவின் உடல்நிலை இன்று அதிகாலை மீண்டும் மோசமடைந்தது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி எம்.எல்.ஏ. பிஷ்னு உயிரிழந்தார். பிஷ்னுவின் மறைவிற்கு பிரதமர் மோடி, மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.   

Tags:    

மேலும் செய்திகள்