2014-ம் ஆண்டுக்கு முன் பத்திரிகையில் தினமும் ஊழல் செய்திகளே வரும்: மத்திய மந்திரி ரிஜிஜூ

கங்கை ஆறு போல் பிரதமர் மோடியின் எண்ணங்கள் மற்றும் மனம் தூய்மையாக உள்ளன என மத்திய சட்ட மந்திரி ரிஜிஜூ கூறியுள்ளார்.

Update: 2023-02-08 11:05 GMT



புதுடெல்லி,


பிரதமர் மோடி பற்றி ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் நேற்று பேசும்போது, தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் பிரதமர் மோடிக்கு இடையே பல ஆண்டு கால நட்புறவு உள்ளது.

அதனாலேயே, தனது நண்பருக்கு சாதகம் ஏற்படும் வகையில் விதிகளை மத்திய அரசு வளைக்கின்றது என குற்றச்சாட்டாக கூறினார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ இன்று பேசினார். அவர் கூறும்போது, 2014-ம் ஆண்டுக்கு முன்பு, பத்திரிகையில் தினமும் ஊழல் பற்றிய செய்திகளே வெளிவரும்.

இதனால், அரசியல்வாதிகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையற்று போய் விட்டது. ஆனால், அரசு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மீது பொதுமக்களுக்கு மீண்டும் நம்பிக்கை பெற செய்தவர் பிரதமர் மோடி.

கங்கை ஆறு போல் பிரதமர் மோடியின் எண்ணங்கள் மற்றும் மனம் தூய்மையாக உள்ளன. தொடர்ந்து அப்படியே இருக்கும் என மந்திரி ரிஜிஜூ கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்