வங்காளதேச பிரதமர் இந்தியா வருகை: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்

புதிய அரசு அமைந்த பிறகு வெளிநாட்டு தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு அரசு பயணம் இதுவாகும்.

Update: 2024-06-21 23:29 GMT

புதுடெல்லி,

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்த அவரை வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் நேரில் வரவேற்றார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த பிறகு வெளிநாட்டு தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு அரசு பயணம் இதுவாகும். கடந்த 9-ந் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடந்த பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட 7 வெளிநாட்டு தலைவர்களில் ஷேக் ஹசீனாவும் ஒருவர் என்பது குறிப்படத்தக்கது.

ஷேக் ஹசீனா இன்று (சனிக்கிழமை) பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதை தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரையும் ஷேக் ஹசீனா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்