கொரியர் மூலம் நியூசிலாந்துக்கு போதைப்பொருள் அனுப்ப முயற்சி - 2 பேர் கைது
கொரியர் மூலம் நியூசிலாந்துக்கு போதைப்பொருள் அனுப்ப முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத்,
ஐதராபாத்தில் உள்ள ஒரு கொரியர் நிறுவனத்தில் இருந்து வெளிநாட்டிற்கு போதைப்பொருள் அனுப்பப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்காக அந்த கொரியர் நிறுவனத்திற்கு நேரில் சென்றனர்.
அப்போது பார்சல் அனுப்புவதற்காக அங்கு வந்த இரண்டு பேரை பிடித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில், சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில், இந்த போதைப்பொருளை அவர்கள் ஐதராபாத்தில் இருந்து நியூசிலாந்துக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.