சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது

மாநிலத்தில் ஒரு சில அசம்பாவிதங்களை தவிர்த்து சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-10 21:06 GMT

பெங்களூரு:-

1.56 லட்சம் போலீசார்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்துவதற்கும், அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கவும் மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 56 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தார்கள். இதுகுறித்து பெங்களூருவில், கர்நாடக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அமைதியாக நடந்தது

சட்டசபை தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தார்கள். ஒரு சில வாக்குச்சாவடிகள் முன்பாக அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் வாக்குவாதம் செய்தார்கள். போலீசார் அந்தந்த இடங்களுக்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாநிலத்தில் ஒரு சில இடங்களில் சிறிய அசம்பாவிதங்கள் நடைபெற்றது.

பெரிய அளவில் எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு வந்து வாக்களிப்பதை பார்க்க முடிந்தது. சிறிய அளவிலான அசம்பாவிதங்களில் ஈடுபட்டோர் கூட கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அலோக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்