மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு

மாநில அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.;

Update:2024-04-27 10:37 IST

புதுடெல்லி,

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதேபோல, கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ.397 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் முதல் கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் நிதியில் இருந்து ரூ.115.45 கோடியும், ரூ.397 கோடி வெள்ள பாதிப்பு நிதியில் இருந்து ரூ.160.61 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் மாநில அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்