ஹிண்டன்பர்க் அறிக்கை: ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 6 மாத அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டில் 'செபி' மனு

அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 6 மாத அவகாசம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் ‘செபி’ மனு அளித்துள்ளது.

Update: 2023-05-01 01:55 GMT

புதுடெல்லி,

அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் புகார் அறிக்கையை தொடர்ந்து, பங்குச்சந்தையில் விதிகளை முறைப்படுத்த சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அபய் மனோகர் சப்ரே தலைமையிலான நிபுணர் குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் 2-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த நிபுணர் குழுவில் ஓ.பி.பட், ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.பி.தேவ்தத், நந்தன் நிலேகனி, சோமசேகரன் சுந்தரேசன் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்றும், அபய் மனோகர் சப்ரே குழு அதன் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் 2 மாதங்களுக்குள் சீலிட்ட உறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்தது.

அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை இந்திய பங்குகள் மற்றும் பரிவா்த்தனை வாரியம் (செபி) 2 மாதங்களுக்குள் ஆய்வு செய்து அதன் நிலை அறிக்கையை 2 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 6 மாதம் அவகாசம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் 'செபி' மனு தாக்கல் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்