தரிகெரே அருகே லாரி மீது டிராக்டர் மோதல்; 10 பேர் காயம்

தரிகெரே அருகே லாரி மீது டிராக்டர் மோதிய விபத்தில் 10 பேர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Update: 2022-11-03 19:00 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா சாக்ேகானஹள்ளியில் இருந்து லக்கவள்ளி கிராமத்திற்கு பாக்குதோட்ட வேலைக்காக அந்த பகுதியை சேர்ந்த சிலர் டிராக்டரில் சென்று ெகாண்டிருந்தனர். அப்போது டிராக்டர் துக்ளப்பூர் கிராம பகுதியில் சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. பின்னர் எதிர்திசையில் வந்துகொண்டிருந்த லாரி மீது மோதி, பின்னர் அதற்கு பின்னால் வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் டிராக்டரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

மேலும் டிராக்டரில் வந்த 10 பேர் காயம் அடைந்தனர். இதில் தோரணலு கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (வயது 22) மற்றும் அஜ்ஜாம்புராவை சேர்ந்த மல்லிகார்ஜுனா (25) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதைப்பாா்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த இருவரையும் மேல்சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து தரிகெரே புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். ேமலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்