வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அசாம் மாநிலத்திற்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் அமீர் கான்!

அசாமில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால், ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-06-28 15:40 GMT

கவுகாத்தி,

அசாமில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால், ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

அசாம் வெள்ளத்திற்கு 28 மாவட்டங்களை சேர்ந்த 2,894 கிராமங்களில் வசிக்கும் 25.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டதன் கார்ணமாக இந்த எண்ணிக்கை தற்போது 21 லட்சமாக குறைந்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் வெள்ள நிவாரணத்திற்கு இந்தி நடிகர் அமீர் கான் ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்கினார். அவரது செயலுக்கு அம்மாநில முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அமீர் கானின் அடுத்த படமாக 'லால் சிங் சத்தா' தயாராகி வருகிறது.

இதனிடையே அசாம் மாநில வெள்ள நிலவரம் குறித்து, அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளதாவது,

அசாமில் இப்போது வரை, 28 மாவட்டங்கள் மற்றும் 2389 கிராமங்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 555 நிவாரண முகாம்கள் மற்றும் 72 நிவாரண விநியோக மையங்கள் செயல்படுகின்றன. பிரம்மபுத்திரா,கோபிலி, பெக்கி ஆகிய நதிகள் அபாய அளவை தாண்டி பாய்கின்றன என்று செய்தி வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்